உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் ஓணம் கொண்டாட்டம்: பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் ஓணம் கொண்டாட்டம்: பக்தர்கள் தரிசனம்

 சபரிமலை : சபரிமலையில் அத்தப்பூ கோலம், பாயச சாப்பாடுடன் ஓணம் கொண்டாடப்பட்டது.

சபரிமலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மூலவருக்கு மஞ்சள் நிற பட்டு அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகர் சன்னதி முன், அத்தப்பூகோலம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில், தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு குத்து விளக்கேற்றினார். பகலில், தேவசம்போர்டு சார்பில், பக்தர்களுக்கு பாயசத்துடன் ஓணம் விருந்து வழங்கப்பட்டது. ஓணம் பண்டிகைக்காக திறக்கப்பட்ட கோவில் நடை, நாளை இரவு, 10:00 மணிக்கு அடைக்கப்படும். கன்னியாகுமரி, குருவாயூர், திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி, ஆற்றுகால் பகவதி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும், அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது. அனைத்து கோவில்களிலும், பக்தர்கள் புத்தாடைகள் அணிந்து, நீண்ட வரிசையில் நின்று, தரிசனம் செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !