உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னுார் வீரமாத்தியம்மன் கோவிலில் வரும் 13ல் கும்பாபிஷேகம்

அன்னுார் வீரமாத்தியம்மன் கோவிலில் வரும் 13ல் கும்பாபிஷேகம்

அன்னுார்:முகாசிசெம்சம்பட்டி, வீரமாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 13ம் தேதி நடக்கிறது.

வடவள்ளி ஊராட்சி, முகாசிசெம்சம்பட்டியில், பழமையான வீரமாத்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக, கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், பிரகாரம் மற்றும் தனி விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளன.

கும்பாபிஷேக விழா, இன்று 12ம் தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. இரவு முதற்கால யாக பூஜை நடக்கிறது. நாளை 13ம் தேதி இரண்டாம் கால யாக பூஜையும், மதியம் கோபுர கலசம் நிறுவுதலும், இரவு 108 திரவியங்களை வேள்வியில் சமர்ப்பித்தலும் நடக்கிறது.

வரும், 13ம் தேதி, காலை 7:45 மணிக்கு, சென்னியாண்டவர் கோவில் கோபுரம், மூலவர், விநாயகர், வீரமாத்தியம்மன் கோவில் கோபுரம், மூலவர் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !