உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி காளிகாம்பாள் திருக்கல்யாணம்

திருத்தணி காளிகாம்பாள் திருக்கல்யாணம்

திருத்தணி: திருத்தணி, பாரதியார் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில்,  விஸ்வகர்மா, மத்விராட் வீரபிரமங்கார் மற்றும் காயத்ரிதேவி ஆகிய சன்னிதிகள்  உள்ளன.

இந்நிலையில், வரும், 17ம் தேதி, விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் காயத்ரிதேவி திருக்கல்யாண விழா நடைபெறுகிறது.இதையொட்டி, காலை, 7:00 மணிக்கு, காயத்ரி தேவி, விஸ்கர்மா எழுந்த ருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

அதை தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, காயத்ரிதேவி விஸ்வகர்மா திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.இரவு, 7:00 மணிக்கு உற்சவர் அம்மன், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடை பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !