பழநி அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :2382 days ago
பழநி: பழநி முருகன் கோயிலை சார்ந்த, பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆவணி பிரமோற்ஸவ விழா செ.,8ல் கொடியேற்றத்துடன் துவங்கி 18 வரை நடக்கிறது. நேற்றுமுன்தினம் இரவு பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரத்தில் திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் பவளக்கால் சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளினார். முக்கிய நிகழ்வாக இன்று காலை (செப்.,16ல்) தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் செய்கின்றனர்.