செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நிறைவு
ADDED :2566 days ago
பல்லடம்: பொள்ளாச்சி ரோட்டில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. செப்., 2 விநாயகர் சதுர்த்தி அன்று, கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 12 நாட்களாக, தினசரி சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று, கும்பாபிஷேக நிறைவு விழா நடந்தது. முன்னதாக, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பால், இளநீர், பன்னீர், தேன், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால், விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. பின், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் செல்வ விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.