பாசிபட்டினம் சந்தனக்கூடு விழா
ADDED :2311 days ago
திருவாடானை: தொண்டி அருகே பாசிபட்டினத்தில் சர்தார் நைனா முகமது ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு விழா நடந்தது.
பாசிபட்டினத்தில் மகான் சர்தார் நைனா முகமது ஒலியுல்லா தர்கா திருவிழா செப்.,4 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. எஸ்.பி.பட்டினம், மருங்கூர் கிராமத்தில் இருந்து புறபட்ட ஊர்வலம் ஸ்தானிகன் வயல், மாணவ நகரி போன்ற பல கிராமங்கள் வழியாக சென்று நேற்று அதிகாலை பாசிபட்டினம் தர்காவை வந்தடைந்தது. தர்காவை மூன்று முறை வலம் வந்து வாசல் முன்பு நிறுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.