உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோடேரு ரங்கநாதர் கோவிலில் கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை

கோடேரு ரங்கநாதர் கோவிலில் கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை

குன்னுார்: குன்னுார் கோடேரி அருகே, கொடப்பாறை கோடேரு ரங்கநாதர் கோவிலில் நேற்று கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை விழா நடந்தது. குன்னுார் -- குந்தா சாலையில் கோடேரி கிராமம் அருகே கொடப்பாறையில் அமைந்துள்ள ரங்கநாதர் கோவிலில், சயன கோலத்தில் ரங்கநாதர் அருள்பாலித்து வருகிறார்.

அருகில் உள்ள கீழுர் மைனலை கிராம இளைஞர் விமல், இந்த கோவிலுக்கு கிருஷ்ணர் சிலையை வழங்கினார். தொடர்ந்து, நேற்று கிருஷ்ணர் பிரதிஷ்டை விழா நடந்தது. காசோலை மட சுவாமிஜி சத்குரு சுவாமி தலைமையில், கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம், யாகம், சிறப்பு பூஜை, வழிபாடு ஆராதனை ஆகியவை நடந்தன. பஜனை, சத்சங்கம் ஆகியவை இடம்பெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கு சுற்றுப்புற கிராமங்களின் ஊர் தலைவர்கள் ராஜு, மணி, அய்யப்பன் முன்னிலை வகித்தனர். ஊர் பெரியவர்கள் லிங்கராஜ், மணி, ராமச்சந்திரன், ராமகிருஷ்ணன் தலைமை வகித்தனர்.விரலில் பாறையை துாக்கி நிற்பது போன்ற, கிருஷ்ணர் சிலை வடிவமைப்பு, பக்தர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது. கோடேரி, அதிகரட்டி, முட்டிநாடு, காசோலை, கெந்தளா, அறையட்டி, கொடலட்டி கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !