உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு அலுவலகம் கட்ட அனுமதி கிடைக்கவில்லை

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு அலுவலகம் கட்ட அனுமதி கிடைக்கவில்லை

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், அலுவலகம் கட்டுவதற்கான  அனுமதி கிடைக்காததால், பல்நோக்கு கட்டடத்தை உபயோகிக்க முடியாமல்,  பக்தர்கள் சிரமப்படு கின்றனர்.

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு, தினமும், ஏராளமான பக்தர்கள்  வருகின்றனர். கிருத்திகை, சஷ்டி, விசாகம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் குவியும்  கூட்டத்தால், பிரசாத கடை, முடி ஏலம், உண்டியல் வருமானம், சிறப்பு  பிரார்த்தனை கட்டணம் என, ஆண்டுக்கு, 6 கோடி ரூபாய் வருவாய்  கிடைக்கிறது.இவற்றை நிர்வகிக்க, கோவில் கொடி மரம் அருகே, பல  ஆண்டுகளாக, கோவில் அலுவலகம் செயல்பட்டு வந்தது.இந்த அலுவலகம்  சேதமடைந்த தால், பக்தர்கள் உபயோகத்திற்காக கட்டப் பட்ட பல்நோக்கு  கட்டத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு இயங்குகிறது.இந்நிலையில், கோவில்  நிர்வாகம், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாதுகாப்பு அறை வசதியுடன்  அலுவலகம் அமைக்க முடிவு செய்து, மூன்று ஆண்டுகளுக்கு முன், கருத்துரு  அனுப்பியது.

அறநிலையத் துறை அனுமதி கிடைக்காததால், அலுவலகம்  கட்டுவது தடைபட்டுள்ளது. இதனால், கிருத்திகை மற்றும் விழா நாட்களில் வரும்  பக்தர்கள், பல்நோக்கு கட்டட வசதி இருந்தும், அதை பயன்படுத்த முடியாத சூழல்  ஏற்பட்டு உள்ளது.எனவே, கந்தசுவாமி கோவி லுக்கு அலுவலகம் கட்ட,  அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !