உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி அன்னமார் கோவில் தேர் திருவிழா

கள்ளக்குறிச்சி அன்னமார் கோவில் தேர் திருவிழா

கள்ளக்குறிச்சி: தென்சிறுவள்ளூர் நல்ல தங்காள் அன்னமார் கோவில் தேர்  திருவிழா நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த தென்சிறுவள்ளூர் நல்லத் தங்காள்  அன்னமார் கோவில் தேர் திருவிழா கடந்த 11 ம் தேதி காப்பு கட்டுதல்  நிகழ்ச்சியுடன் துவங்கியது.

இதனைத் தொடர்ந்து பால்குடம் எடுத்தல், ஊரணி பொங்கல் நிகழ்ச்சி மற்றும் நாள்தோறும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து நடந்த தேர் திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்து தேரில் எழுந்தருள செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று தேர்வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.விழாவிற்கான ஏற்பாட்டினை தென்சிறுவளூர் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !