வீரபாண்டி அருகே கும்பாபிஷேக ஓராண்டு தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :2236 days ago
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி, காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்தாண்டு ஆக., 29ல் நடந்தது.
அதன் முதலாமாண்டு நிறைவு விழா, கடந்த ஆக., 30ல் தொடங்கியது. அதையொட்டி, நேற்று 15ம் தேதி காலை, ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலிலிருந்து, முளைப்பாரி, பாலிகை, புனிதநீர் நிரப்பிய தீர்த்தக்குடங்களுடன், திரளான பக்தர்கள், மேள, தாளம் முழங்க, ஊர்வலமாக, காளியம்மன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, மூலவர் காளியம்மனுக்கு, அபிஷேகம் செய்து, பக்தர்கள் வழிபட்டனர். இதையடுத்து, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, மலர் அலங்கார சப்பரத்தில், சிங்க வாகனத்தில், சர்வ அலங்காரத்தில் அம்மனை எழுந்தருளச்செய்து, திருவீதி உலா வந்தனர்.