உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை நடை திறப்பு: புரட்டாசி பூஜை துவக்கம்

சபரிமலை நடை திறப்பு: புரட்டாசி பூஜை துவக்கம்

சபரிமலை: சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. புரட்டாசி மாத பூஜைகள் இன்று துவங்கியது. நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்தார்.

தொடர்ந்து பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கினார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். . செப்., 21 வரை எல்லா நாட்களிலும் அதிகாலை நடை திறந்தது முதல் 11:30 வரை நெய்யபி ஷேகம், உஷபூஜை. உச்சபூஜை, களபாபிஷேகம், மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு அத்தாழபூஜை நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். செப்., 21 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !