திருப்புளிய(னித) மரம்
ADDED :4903 days ago
திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் சுமார் 28 கி.மீ. தூரத்தில் ஆழ்வார் திருநகரி உள்ளது. இங்குள்ள புளிய மரத்தை புனித மரமாகப் போற்றி பக்தர்கள் வணங்குகின்றனர். இரவில் இது உறங்காததால் (இலைகள் மூடாது), இதை உறங்காப்புளி என்கிறார்கள். இந்த புளிய மரத்தின் (திருப்புளியாழ்வார்) பொந்தில்தான் 16 வருடங்கள், யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் நம்மாழ்வார் எழுந்தருளி இருந்தாராம். ஸ்ரீமந் நாராயணரே நம்மாழ்வாராக அவதரிக்க, ஆதிசேஷன் புளிய மரமாக மாறியதாக ஐதீகம்.