விருத்தாசலத்தில் விஸ்வகர்மா சிலை ஊர்வலம்
ADDED :2283 days ago
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் விஸ்வகர்மா சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று, வயலுார் ஏரியில் கரைத்தனர்.விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி, விருத்தாசலம், எம்.ஆர்.கே., நகரில் விஸ்வகர்மா சிலையை வைத்து, விஸ்கர்மா சமூகத்தினர் நேற்று முன்தினம் 17ம் தேதி வழிபட்டனர்.
இரண்டாம் நாளான நேற்று 18ம் தேதி காலை சிறப்பு பூஜை செய்து, மேள தாளங்கள் முழங்க எம்.ஆர்.கே., நகரிலிருந்து ஊர்வலமாக ஆலடி ரோடு, உளுந்துார்பேட்டை ரோடு வழியாக வயலுார் ஏரியில் கொண்டு சென்று கரைத்தனர். இதில், 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.