சூலுார் விநாயகர் கோவிலில் 10ம் ஆண்டு விழா
ADDED :2416 days ago
சூலுார் : லட்சுமி நகர் செல்வ விநாயகர் கோவில் ஆண்டு விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சூலுார் அடுத்த முதலிபாளையம் லட்சுமி நகர் செல்வ விநாயகர் கோவிலில், 10ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
அதிகாலை, பல்வேறு திரவியங்களை கொண்டு கணபதி ஹோமம் நடந்தது. மாலை, அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. ராஜ அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீபாராதனை முடிந்து அன்னதானம் நடந்தது. தொடர்ந்து, இஸ்கான் அமைப்பினர் பக்தி பஜனை பாடல்களை பாடினர். நிகழ்ச்சியில், 150க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.