திருப்புத்துார் பெருமாள் கோயில்களில் புரட்டாசி உற்ஸவம்
திருப்புத்துார் : திருப்புத்துார் பெருமாள் கோயில்களில் புரட்டாசி உற்ஸவத்தை முன்னிட்டு பக்தர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, உற்ஸவர் நின்ற கோலத்தில் திருநாள் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து உலக மக்களின் நன்மைக்காக சகஸ்ரநாமம் உச்சரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.கொங்கரத்தி வன்புகழ் நாராயணப்பெருமாள் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்து, சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் காலை 7:00 மணிக்கு மூலவருக்கு அபிேஷக,ஆராதனைகளும், காலை 10:00 மணிக்கு உற்ஸவருக்கு அபிேஷக ஆராதனைகளும், இரவில் ஹம்ச வாகனத்தில் திருவீதி உலாவும் நடந்தது.நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் பெருமாள் கோயில்களில் முதல் புரட்டாசி சனியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.