உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு

 காரைக்குடி : புரட்டாசி முதல் சனியான நேற்று காரைக்குடியை சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தென் திருப்பதி என அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. திருவேங்கடமுடையான் சுவாமி அலர்மேல் மங்கை தாயாருடன் சன்னதி எதிரே உள்ள மண்டபத்தில் தங்கஅங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காரைக்குடி, மாத்துார், கண்டனுார், புதுவயல், தேவகோட்டை ரஸ்தா, கோட்டையூர், கண்டனுார், பள்ளத்துார் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.* காரைக்குடி செஞ்சை, கழனிவாசல் பெருமாள் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.*சிவகங்கையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிவகங்கை பிராமண மஹா ஜனங்கள் சார்பாக 33 வது ஆண்டாக நடத்தப்பட்ட இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி காலை 8:50 மணிக்கு உற்ஸவருக்கு பல்வேறு சிறப்பு அபிேஷகங்கள் செய்யப்பட்டது. சிறப்பு திருமஞ்சனம், திருவாராதனம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மூலவர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !