உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமையான கோயிலில் 1008 சங்காபிஷேகம்

பழமையான கோயிலில் 1008 சங்காபிஷேகம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது.கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குகநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ராஜராஜச் சோழனால் கட்டப்பட்டதாகும்.இக்கோயில் மூலஸ்தானத்தில் குமரி மாவட்டத்திலேயே மிகப் பெரிய சிவலிங்கம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த குகநாதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவாதிரை நட்சத்திர நாளன்று, 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.அதே போல நிகழாண்டும் புரட்டாசி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு கோமாதா பூஜை, காலை 9 மணிக்கு சங்கு பூஜை, காலை 10.30க்கு 1008 சங்காபிஷேகம், அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து வாகன பவனியும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா, குகநாதீஸ்வரர் பக்தர்கள் பேரவைத் தலைவர் கோபி, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !