உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜ அலங்காரத்தில் கால பைரவர்

ராஜ அலங்காரத்தில் கால பைரவர்

 அதியமான்கோட்டை: புரட்டாசி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், மன்னர் அதியமான் வழிபட்ட தட்சணகாசி கால பைரவர் கோவில் உள்ளது.இங்கு, ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும், தட்சணகாசி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. புரட்டாசி தேய்பிறை அஷ்டமியான நேற்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில், ராஜ அலங்காரத்தில், தட்சணகாசி கால பைரவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். வேண்டுதலுக்காக, சாம்பல் பூசணி, தேங்காய், எலுமிச்சையில் தீபமேற்றி வழிபாடு செய்தனர். நள்ளிரவு, 12:00 மணிக்கு மிளகாய் வற்றல் யாக பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !