உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவலோகநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

சிவலோகநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, சொர்ண ஆகர்ஷண காலபைரவருக்கு, நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. இதில்பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம், குங்குமம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், இரவு 7.00 மணியளவில், சொர்ண ஆகர்ஷண காலபைரவருக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்து, தீபராதணை காண்பிக்கப்பட்டது. இதில், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, காலபைரவரை வழிப்பட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !