விழுப்புரத்தில் ஆன்மிக படவிளக்க கண்காட்சி
ADDED :2308 days ago
விழுப்புரம்: கலியவரதராஜ பெருமாள் கோவிலில், ஆன்மிக படவிளக்க கண்காட்சி நடந்தது. வளவனுார் பிரம்மாகுமாரிகள் இயக்கம் சார்பில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, குமாரகுப்பம் கலியவரதராஜ பெருமாள் கோவிலில் ஆன்மிக படவிளக்க கண்காட்சி நடந்தது. இதில் வளவனுார் மற்றும் சுற்று பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் கலந்துக்கொண்டனர். ஏற்பாடுகளை, பிரம்மாகுமாரிகள் இயக்க நிர்வாகி செல்வமுத்துக்குமரன் செய்திருந்தார்.