காசியில் சுடுகாட்டுச் சாம்பல் பிரசாதமாக தருவது ஏன்?
ADDED :2213 days ago
காசிக்கு ’மகா மயானம்’ என்று பெயர். அங்கு இறப்பவர்களுக்கு சிவபெருமானே ஆத்ம சாந்தி வழங்குகிறார். இறந்தவர்களின் பாவத்தைப் போக்க, சுடுகாட்டுச் சாம்பலை நள்ளிரவு பூஜையில் சுவாமிக்கு பூசுவர். இதை பிரசாதமாக கொடுப்பர். இதை பூசுவோருக்கு பாவம் நீங்கும். சிவனருளால் முக்தி கிடைக்கும்.