உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்பு காட்டுங்கள்

அன்பு காட்டுங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடையில் பிறந்தவர் சிவானந்தர். மலேசியாவில்  மருத்துவராக பணிபுரிந்த இவரிடம், நரசிம்ம ஐயர் என்பவர் சமையல்காரராக இருந்தார். அவருக்கு பேசிய சம்பளம் 25 டாலர். அவருக்கு தேவையான உதவிகளைச் செய்ததோடு யோகாசனம், தத்துவம் போன்ற நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். பேசியதை விட 10 டாலர் அதிகம் கொடுத்து, ”இது என்னுடைய அன்புக் காணிக்கை” என்றார் சிவானந்தர்.  இளைஞராக இருந்த போதே அனைவரிடமும் அன்பு காட்டும் மனம் சிவானந்தருக்கு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !