மன்னிப்போம்! மறப்போம்!
ADDED :2229 days ago
இரண்டாம் உலகப்போர் நடந்த 1940 நவம்பர் 14ம் நாள் ஜெர்மானிய விமானப்படை இங்கிலாந்திலுள்ள கெவண்ட்ரி நகரின் மீது குண்டுமழை பொழிந்தது. பதுங்கு குழிகளில் மக்கள் ஒளிந்து கொண்டதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. ஆனால் பொருட்சேதம் இருந்தது. தாக்குதல் முடிந்தபின் நகரின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஒரு தேவாலயம் தரைமட்டமாக கிடப்பதை கண்டனர். ஆண்டவரை ஆராதிக்கும் இடம் இப்படி அலங்கோலமாகி விட்டதே என வருந்தியபடி, அரைகுறையாக எரிந்து கருகிக் கிடந்த இரண்டு உத்திரத்தை சிலுவை போல வைத்தனர். அந்த சிலுவையின் அடியில் ”பிதாவே இவர்களை மன்னியும்” என பெரிய எழுத்துக்களில் எழுதி வைத்தனர். ’தேவன் உங்களை மன்னித்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்’ என்ற வசனம் இங்கு நினைவுகூரத்தக்கது.