ராஜகணபதி கோவிலில் ரூ.9.59 லட்சம் காணிக்கை
ADDED :2288 days ago
சேலம்: சேலம், ராஜகணபதி கோவில் உண்டியல் காணிக்கை, சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில், மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் உமாதேவி மேற்பார்வையில், நேற்று எண்ணப்பட்டது. நிரந்தர உண்டியல், மூன்றில், ஒன்பது லட்சத்து, 59 ஆயிரத்து, 551 ரூபாய், விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் சிறப்பு உண்டியலில், 29 ஆயிரத்து, 162 ரூபாய், 27.500 கிராம் வெள்ளி, 60 இங்கிலாந்து பவுன்ட் ஆகியவை, வருவாயாக கிடைத்தது. முன்னதாக, கடந்த ஆக., 13ல், உண்டியல் காணிக்கையை எண்ணியபோது, எட்டு லட்சத்து, 22 ஆயிரத்து, 683 ரூபாய் வருவாய் கிடைத்தது.