உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடாஜலபதி கோவில் ஸ்தல வரலாறு வெளியீடு

வெங்கடாஜலபதி கோவில் ஸ்தல வரலாறு வெளியீடு

செஞ்சி : செஞ்சி அடுத்த மேல்தாங்கல் திருவத்திமலை வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் ஸ்தல வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. திருவத்தி பெருமாள் சேவகர் சுவாமிஸ்ரீ தலைமை தாங்கினார். செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., மஸ்தான் நுாலை வெளியிட்டார். அன்னமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முனுசாமி புத்தகத்தை பெற்று கொண்டார். பென்னகர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர் ரவி மற்றும் விழாக் குழுவினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !