உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோளீஸ்ஸ்வரர் கோவிலில் நாயன்மார் குருபூஜை விழா

சோளீஸ்ஸ்வரர் கோவிலில் நாயன்மார் குருபூஜை விழா

வெள்ளகோவில்: சோளீஸ்வரசுவாமி திருக்கோவிலில் சிவனடியார்கள், சார்பில் நாயன்மார்களுக்கு குருபூஜை அபிஷேகம் சிறப்பாக நடந்தது.

சைவ சமய தனி அடிகளார் அறுபத்தி மூவர் தொகையடியார்கள், ஒன்பதின்மார் ஆகியவைகளுக்கு, விகாரி ஆண்டு ஆண்டு முழுவதும் 63 அபிஷேகம் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு அருள்நந்தி சிவம் பூரநட்சத்திரத்தை முன்னிட்டு குருபூஜை விழா சிறப்பாக நடந்தது. இதில் சிவனடியார்கள் கலந்துகொண்டு இசை, இசைக்க சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிவனடியார்கள், பக்தர்கள், பொதுமக்கள், குருபூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !