உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

கீழக்கரையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

கீழக்கரை : கீழக்கரை கிழக்குத்தெரு முஸ்லிம் ஜமா அத் சார்பில் நேற்று 27ல், காலை  7:30 மணிக்கு மழை வேண்டி கைரத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி  வளாகத்தில் சிறப்பு தொழுகை நடந்தது.

சம்சுதீன் ஆலிம் பயான், மார்க்க  சொற்பொழிவு நிகழ்த்தி மவுலீது ஓதினார். கீழக்கரையில் உள்ள அனைத்து  ஜமாஅத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.பெண்களுக்கு  தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. வாகித் ஆலிம்ஷா தொழுகையை  நடத்தினார். ஏற்பாடுகளை கீழக்கரை கிழக்குத்தெரு ஜமாஅத் தலைவர் சேகு  அபுபக்கர் சாகிப், துணைத்தலைவர் முகம்மது ஹஜிகர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !