உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டிபட்டி கோயில் தெப்பத்தில் குவியும் குப்பை

ஆண்டிபட்டி கோயில் தெப்பத்தில் குவியும் குப்பை

ஆண்டிபட்டி : ஜம்புலிபுத்துார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பத்தில்  சேரும் குப்பையை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம், அறநிலையத்துறை  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜம்புலிபுத்துார் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பத்திற்கு  மழைக்காலத்தில் கிடைக் கும் நீர் சில மாதங்கள் தேங்கி நிற்கும். இதனால்  இப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். கடந்த சில நாட்களாக பெய்த  மழையில் தெப்பத்திற்கு நீர் வரத்து கிடைக்கிறது. கடந்த பல மாதமாக துாய்மைப்பணி செய்யாத தெப்பத்தில் தற்போது குப்பை அதிகம் தேங்கி உள்ளது.

அதனுடன் மழைநீர் சேர்ந்தால் சில நாட்களில் தண்ணீர் பாதிப்படைந்து விடும்.  எனவே மழைநீர் முழுமையாக தேங்கும் முன் தெப்பத்தில் குவிந்துள்ள  குப்பையை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம், அறநிலையத்துறையினர்  நடவடிக்கை எடுக்க வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !