வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2366 days ago
செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் மாகாளய அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மேல் மலையனூர் தாலுகா வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் மாகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று முன் தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செயதனர், இரவு 8 மணிக்கு கலை நிகழ்ச்சியும். இரவு 10 மணிக்கு அங்காளம்மன் ஊஞ்சல் தாலாட்டும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அரங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.