உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பிரம்மோற்சவம் இன்று துவக்கம்

திருப்பதி பிரம்மோற்சவம் இன்று துவக்கம்

திருப்பதி: திருமலையில் பிரம்மோற்சவம் எவ்வித தடங்கலும் இல்லாமல் நடக்க, ஏழுமலையான் கோவிலுக்குள் அங்குரார்ப்பணம் உற்சவம் நடத்தப்பட்டது.திருமலையில், இன்று (செப்.,30) முதல், வருடாந்திர பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இந்த பிரம்மோற்சவம், எவ்வித தடங்கல் மற்றும் இடையூறு இல்லாமல் நடக்க, நேற்றிரவு, அங்குரார்ப்பணம் உற்சவம் நடந்தது. நேற்று மாலை அர்ச்சகர்கள் குழுவினர், ஏழுமலையானின் சேனாதிபதி விஷ்வக்சேனர் தலைமையில், அருகில் உள்ள நந்தவனத்திற்கு சென்று, அங்குள்ள புற்று மண்ணை தோண்டி எடுத்து வந்தனர். அந்த புற்று மண், ஏழுமலையான் கோவிலுக்குள் உள்ள மண்டபத்தில் கொட்டப்பட்டது. அதில், அர்ச்சகர்கள், பூதேவியின் உருவத்தை வரைந்தனர். அந்த உருவத்தின் வயிற்றுப் பகுதியிலிருந்து மண் எடுத்து, மண் பாலிகைகளில் இட்டனர். ஊற வைத்த நவதானியங்களை, அதில் விதைத்தனர். அந்த நவதானியங்கள் நன்றாக வளர வளர பிரம்மோற்சவம் வெற்றிகரமாக நடக்கும் என்பது ஐதீகம். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !