உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலைவிழா துவக்கம்

தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலைவிழா துவக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், நவராத்திரி கலை விழா நேற்று இரவு துவங்கியது.தஞ்சை, பெரியநாயகி உடனுறை பெருவுடையார்கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா, 10 நாட்கள் நடக்கும். இந்த ஆண்டு கலை விழா நேற்று முதல் துவங்கியது. ஒவ்வொரு நாளும் மாலை, 6 மணி முதல் இரவு, 8 மணிவரை பெரியநாயகி அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. நவராத்திரி கலை விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, நேற்று இரவு அம்பாள் மனோன்மணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 30ம் தேதி, அம்பாள் மீனாட்சி அலங்காரத்துடனும், அக்.01ம் தேதி, அம்பாள் சதஸ் அலங்காரத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 02ம் தேதி காயத்ரி அலங்காரத்துடனும், 03ம் தேதி அன்னபூரணி அலங்காரத்துடனும், 04ம் தேதி அம்பாள் கெஜலெட்சுமி அலங்காரத்துடனும், 05ம் தேதி சரஸ்வதி அலங்காரத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 06ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரத்துடனும், 07ம் தேதி, மகிஷாஸ்வரமர்த்தினி அலங்காரத்துடனும், 08ம் தேதி, விஜயதசமி அலங்காரத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒவ்வொருநாளும் இரவு பரதநாட்டியம், குச்சிப்புடி, வீணை இசை, வாய்ப்பாட்டு, மோகினி ஆட்டம், வயலின் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நவராத்திரி கலை விழாவை முன்னிட்டு, பிரஹார மண்டபத்தில் தசாவதார கொலு கண்காட்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !