ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு
ADDED :2224 days ago
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் கொலு உற்ஸவம் துவங்கியது.இதனை முன்னிட்டு அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு கொலு மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை ரகு மற்றும் ரமஷே் பட்டர் நடத்தினர். சாகம்பரி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை திரளான பக்தர்கள் தரிசித்தனர். ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜவகர் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். தினமும் இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.