பேட்டராய ஸ்வாமி கோவில் மஹா தேரோட்ட விழா!
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை சமுத்திரவள்ளி சமேத பேட்டராய ஸ்வாமி கோவில் உள்ளது. நேற்று இக்கோவில் தேர்த்திருவிழா நடந்தது. விழாவையொட்டி உற்சவ மூர்த்திகள், சிறப்பு அலங்காரம் செய்து கோவிலில் இருந்து ஊர்வலமாகமாக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு கொடி பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மஹா மங்கமங்காளாரத்தி நடந்தப்பட்டு தேரை கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்சாயத்து தலைவர் நாகேஷ் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலையில் நிலையை வந்தடைந்தது. இரவு "குருஷேத்திரம் தெலுங்கு நாடகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்த நாடகத்தை கண்டு ரசித்தனர். நாளை இன்னிச்சை கச்சேரி, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு பூபல்லக்கு, வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பிலும், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பிலும் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.