உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் நவராத்திரி கொலு

காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் நவராத்திரி கொலு

காரைக்கால்: காரைக்காலில் கைலாசநாதர் திருக்கோவில் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் நவராத்திரி கொலு தர்பார் நடைபெற்றது.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் கோவில் மணி மண்டபத்தில் கைலாசநாதர் திருக்கோவில் மட்டும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் நவராத்திரி கொலு தர்பார் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய கொலு தர்பார் வரும் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் தொடங்கி நவராத்திரி கொலு தர்பாரை திருக்கயிலாய பரம்பரைத் திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுடன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அசனா எம்.எல்.ஏ.கலெக்டர் விக்ரந்தராஜா.அறங்காவலர் குழு தலைவர் கேசவன். துணைத் தலைவர் ஆறுமுகம். செயலாளர் பக்கிரிசாமி. பொருளாளர் ரஞ்சன் உள்ளிட்ட சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !