ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயில் புரட்டாசி திருவிழா துவக்கம்
ADDED :2224 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயிலுடன் இணைந்த வடபத்ரசயனர் சுவாமி கோயில் புரட்டாசி பிரம்மோற்ஸவ விழா நேற்று (செப்., 30ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.
காலை 7:00 மணிக்கு கொட்டும் மழையில் கொடிப்பட்டம் கோயில் பிரகாரம் சுற்றி எடுத்து வரப்பட்டது. சிறப்பு பூஜைகள் செய்து, கொடி மரத்தில் கொடிப்பட்டத்தை வாசுதேவபட்டர் ஏற்றினார். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பூமாதேவி, ஸ்ரீதேவி, பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் பங்கேற்றனர். 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவை முன்னிட்டு பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் தினமும் காலையில் மண்டபம் எழுந்தருள்கிறார். மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. அக்., 8 அன்று காலை 7:00 மணிக்கு செப்பு தேரோட்டம் நடக்கிறது.