புதுச்சேரி அங்காளபரமேஸ்வரி கோவில் நவராத்திரி விழா
ADDED :2282 days ago
புதுச்சேரி : சின்னசுப்ராயப்பிள்ளை வீதி அங்காளபரமேஸ்வரி கோவில் நவராத்திரி விழாவில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.புதுச்சேரி சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி நவராத்திரி விழா, நேற்று முன்தினம் (செப்., 29ல்), துவங்கியது.
தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். முதல் நாளான நேற்று முன்தினம், (செப்., 29ல்)மங்கள துர்கை அலங்காரத்திலும், 2ம் நாளான நேற்று (செப்., 30ல்) சம்ஹார துர்கை அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.