அங்காளம்மனுக்கு பட்டீஸ்வரம் துர்க்கை அலங்காரம்
ADDED :2232 days ago
புதுச்சேரி:அங்காளம்மன் கோவில் நவராத்திரி விழாவில், பட்டீஸ்வரம் துர்கை அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
புதுச்சேரி, சின்ன சுப்ராயப் பிள்ளை வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா, வரும் 29ம் தேதி துவங்கியது; அக்டோபர் 24ம் தேதி வரை விழா நடக்கிறது.நவராத்திரி விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு தினமும் மாலையில் அபிேஷகம் நடத்தப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். மூன்றாம் நாளான நேற்று, அங்காளம்மனுக்கு பட்டீஸ்வரம் துர்கை அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயக்குமார் மற்றும் குழுவினரும், நிர்வாக அதிகாரி ஜனார்த்தனனும் செய்திருந்தனர்.