காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பு பூஜை
ADDED :2227 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது.
கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு, சித்தி விநாயகர், காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரியையொட்டி, விஸ்வகர்மா சமூகத்தினர் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர். சித்தி விநாயகருக்கும், காமாட்சி அம்மனுக்கும், சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காமாட்சி அம்மனுக்கு பட்டுப்புடவை உடுத்தி, சர்வ அலங்காரம் செய்யப்பட்டது.லலிதா சகஸ்ரநாம மந்திரங்களை வாசித்து குங்கும அர்ச்சனை செய்தபின், மந்திர உபசார பூஜை செய்தனர். நவராத்திரி அம்மன் பூஜை மகிமை குறித்து அர்ச்சகர் ராஜி பக்தர்களுக்கு விளக்கினார். பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் வேலு செய்திருந்தார்.