உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனலட்சுமி அலங்காரத்தில் மேல்மலையனுார் அங்காளம்மன் அருள்பாலிப்பு

தனலட்சுமி அலங்காரத்தில் மேல்மலையனுார் அங்காளம்மன் அருள்பாலிப்பு

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் நவராத்திரி விழாவில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளினால் சிறப்பு தனலட்சுமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 4ம் நாள் நவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெள்ளிக்கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். அதையடுத்து, உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் செய்து, 2000, 500, 100, 50, 20,10 ரூபாய் நோட்டுக்களினால் 5 லட்சம் ரூபாயில் சிறப்பு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !