முத்தாரம்மன் தசரா திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :2296 days ago
அவிநாசி: குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தசரா விழாவுக்கு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த சென்றனர்.
கர்நாடக மாநிலம், மைசூருவில், 10 நாள் தசரா திருவிழா, பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல், தென் தமிழகத்தில், 10 நாள் தசரா திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறிய கடற்கரை கிராமமான குலசேகரப்பட்டணத்தில் முத்தாரம்மன் கோவிலில், தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தெய்வங்களின் வேடம் தரித்த பக்தர்கள், ஊர் ஊராக சென்று காணிக்கை பெற்று, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். அதன்படி, அவிநாசியில், பத்ரகாளி அம்மன், ஆஞ்சநேயர், அம்மன், விலங்குகள் வேடம்பூண்டு நேர்த்திக்கடன் செலுத்த, குலசேகரன்பட்டணத்துக்கு சென்றனர்.