சேலத்திலிருந்து 5 டன் பூக்கள் திருமலைக்கு அனுப்பி வைப்பு
ADDED :2297 days ago
சேலம் : சேலத்திலிருந்து 5 டன் பூக்கள் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.திருமலை திருப்பதியில் புரட்டாசி பிரமோற்ஸவம் நடந்து வருகிறது. இதில் நடக்கும் கருட சேவைக்கு அனுப்புவதற்காக சேலம் பக்திசாரர் பக்த சபா சார்பில் பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் நேற்று பூத்தொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பக்த சபா நிர்வாகிகளால் வழங்கப்பட்ட 5 டன் பூக்கள் ஆரங்களாகவும் மாலைகளாவும் பெண்கள் தொடுத்தனர். அதன் பின் அவை திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.