உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சிறுமியர் நாட்டியம்

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சிறுமியர் நாட்டியம்

கோவை:ஸ்ருதிலயா கலாகேந்திரா நாட்டிய பள்ளி மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சி, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடந்தது.ரேஸ்கோர்ஸில் செயல்படுகிறது, ஸ்ருதி லயா கலாகேந்திரா நாட்டிய பள்ளி. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இப்பள்ளி மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சி, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடந்தது. 50க்கும் மேற்பட்ட மாணவியர், மகாத்மா காந்தியின் உருவப்படத்துடன், ரகுபதி ராகவ ராஜா ராம் என்ற பாடலுக்கு நடனமாடி வசீகரித்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !