நல்லாத்துார் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா
ADDED :2303 days ago
புதுச்சேரி: நல்லாத்துார் வரதராஜப் பெருமாள் கோவிலில் நடக்கும் நவராத்திரி விழாவில், வெங்கடாஜலபதி அலங்காரத்தில் சுவாமி உள்புறப்பாடு நடந்தது.
ஏம்பலம் அடுத்த நல்லாத்துார் கிராமத்தில் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நவராத்திரி விழா பிரசித்திப் பெற்றதாகும்.இந்தாண்டு, நவராத்திரி விழா, கடந்த 29ம் தேதி துவங்கியது. முதல் நாளன்று, மச்ச அவதார அலங்காரத்திலும், இரண்டாம் நாளன்று, வெண்ணைத் தாழி அலங்காரத்திலும், மூன்றாம் நாளில் காளிங்க நர்த்தன அலங்காரத்திலும் சுவாமி அருள்பாலித்தார்.நான்காம் நாள் விழாவில், சுவாமிக்கு வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமி - அம்மன் பிரகாரத்தில் உள்புறப்பாடு நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.