கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நவரத்திரி விழா
ADDED :2225 days ago
சின்னசேலம்: சின்னசேலம் நகரில் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி உற்சவர் துர்கை அலங்காரத்தில் அருள்பாலித்தார். நவரத்திரியை முன்னிட்டு கன்னிகா பரமேஸ்வரி, ஆக்கிய விநாயகர், விஜயபுரம் வேதவல்லி மாரியம்மன், செல்வமுருகன் கோவில்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் துர்கை அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்மன் அருள்பலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.