உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை நவராத்திரி விழாவில் கோலாகலம்

உடுமலை நவராத்திரி விழாவில் கோலாகலம்

உடுமலை:உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், உற்சவர் சுவாமிகளுக்கு கொலு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

லட்சுமி, சரஸ்வதி, துர்காதேவிகளின் அருளைப்பெற கொண்டாடப்படும் நவராத்திரி திரு விழா, உடுமலையில் கொலு வைத்து வழிபாட்டுடன் துவங்கியது.பிரசன்ன விநாயகர் கோவி லில், கடந்த 29ம்தேதி முதல், நாள்தோறும் நவராத்திரி நிறைவு பெறும், அக்., 8ம் தேதி வரை நாள்தோறும் காலையில், விசாலாட்சி அம்மனுக்கு, அபிஷேகத்துடன் சிறப்பு அலங்காரம் நடக்கிறது.

தீபாராதனையுடன் சிறப்பு பூஜை நடக்கிறது.கோவிலுள்ள, விஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிகள், விநாயகர், நடராஜர் சமேத சிவகாமி அம்மன், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் உள்ளிட்ட உற்சவர் சுவாமிகள் கொலு வில் வைக்கப்பட்டுள்ளனர்.நவராத்திரி நிறைவு பெறும் வரை, நாள்தோறும் மாலையில், சிறப்பு அலங்காரத்துடன், தீபராதனைகள் நடக்கின்றன.

பூஜைகளின் நிறைவாக, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. நவராத்திரி விழாவை முன்னிட்டு, கார்த்திகை விழா மன்றத்தின் சார்பில் நாள்தோறும், பக்தி இன்னிசை, சொற் பொழிவு உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் மாலையில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !