உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காந்தி ஜெயந்தி: ராமேஸ்வரம் அக்னி கரையில் துாய்மை பணி

காந்தி ஜெயந்தி: ராமேஸ்வரம் அக்னி கரையில் துாய்மை பணி

ராமேஸ்வரம்:மகாத்மா காந்தி 150வது பிறந்த தினம் முன்னிட்டு நாடு முழுவதும் அரசு அதிகாரி கள், சமூக ஆர்வலர்கள் துாய்மை பணி செய்து, பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

அதன்படி நேற்று 3ல் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் கலெக்டர் வீரராகவராவ் தலை மையில் சமூக ஆர்வலர்கள், துப்புரவு ஊழியர்கள் துாய்மை இந்தியா, பாலிதீன் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனர்.பின் கலெக்டர் வீரராகவராவ், கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கேசவதாஸ், ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல்ஜபார், நகராட்சி ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் கடலோரத்தில் கிடந்த கழிவு துணி, குப்பையை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !