கீழடியில் பாதுகாப்பு ஏற்பாடு
ADDED :2229 days ago
திருப்புவனம்:கீழடியில் அகழாய்வை பார்வையிட வருவோரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிவகங்கை எஸ்.பி., ரோஹித்நாதன் பார்வையிட்டார்.
இங்கு 5ம் கட்ட அகழாய்வில் 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும், 2 ஆயிரத்து 600 ஆண்டுக்கு முற்பட்ட தமிழர்கள் வாழ்ந்த பகுதி என கண்டறிந்துள்ளனர். இந்த இடத்தை தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள் பார்வையிட்டு செல்கின்றனர். இதனால் இங்கு கூட்டம் அதிகரித்து காணப் படுகிறது. பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி, எஸ்.பி., ரோஹித்நாதன் நேற்று (அக்., 3ல்) ஆய்வு செய்தார். இங்கு நிரந்தரமாக போலீஸ் பணியமர்த்துவதென முடிவு செய்துள்ளார்.