விருதுநகர் துாய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா துவங்கியது
விருதுநகர்: விருதுநகர் நிறைவாழ்வு நகரில் உள்ள துாய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதை முன்னிட்டு நேற்று (அக்., 4ல்) நிறைவாழ்வு நகர் பாதிரியார் தாமஸ் வெனிஸ் முன்னி லையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் துாய ஜெபமாலை அன்னை உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து திருப்பலி , மறையுரை நடந்தது. திரளானோர் பங்கேற்றனர்.
தினமும் ஆலய வளாகத்தில் ஜெபமாலை அன்னை தேர்பவனி, நற்கருணை ஆசீர் நடக்கிறது.
5ம் நாளான அக். 7 மாலை 6:00 மணிக்கு பாதிரியார் ஜோசப் தலைமையில் நவநாள் திருப்பலி , கலைநிகழ்ச்சிகள், சமபந்தி அசன விருந்து நடக்கிறது. 9ம் நாள் விழாவில் ஜெபமாலை அன்னை உருவம் தாங்கிய தேர்பவனி நடக்கிறது. 10ம் நாள் பாதிரியார் வின்சென்ட் தலைமை யில் திருவிருந்து, திருப்பலி, மறையுரை நடக்கிறது. அன்று மாலை நற்கருணை பவனியுடன் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை நிறைவு வாழ்வு நகர் பாதிரியார் தாமஸ் வெனிஸ் தலைமையில் திருச்சிலுவை அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்கின்றனர்.