பெருமாளுக்கு கவசம் பன்னீர் காணிக்கை
ADDED :2228 days ago
சென்னை: கீழ்கட்டளை, லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கு காணிக்கையாக, வெள்ளிக்கவசம் வழங்கி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தரிசனம் செய்தார். சென்னை, பல்லாவரம் அடுத்த கீழ்கட்டளையில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. நேற்று புரட்டாசி மாதம், மூன்றாம் வாரத் திருவிழா நடந்தது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் பங்கேற்றார். சுவாமிக்கு வெள்ளிக்கவசம் வழங்கி, அவர் வழிபட்டார்.முன்னாள், எம்.பி., மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் சின்னையா பங்கேற்றனர்.