உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் கோவில் திருவிழா; பல்லக்கில் பவனி

ராமர் கோவில் திருவிழா; பல்லக்கில் பவனி

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கருமந்துறை, கிளாக்காடு ராமர் கோவிலில், 11ம் ஆண்டு திருவிழா, நேற்று நடந்தது. அதில், மூலவர் ராமர், சீதை, லட்சுமணன், தாமரை குளத்தில் வீற்றிருக்கும் பள்ளி கொண்ட பெருமாள், கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, ராமர் சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு, கிளாக்காடு, கருமந்துறையில் முக்கிய வீதிகள் வழியாக, பல்லக்கில், ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, மஞ்சள் நீராட்டுதலுடன், திருவிழா நிறைவடைகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !